Podcast: Download (Duration: 1:25 — 1.4MB)
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (One Thousand and One Nights) என்பது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும்.
ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு கால கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் அரேபிய, பாரசீக மற்றும் இந்திய கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் எனப்படுகின்றது.
சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும்.
மேலும் விவரங்களுக்கு: Wikipedia
கதை சொல்றது உங்க ரெஜியா
- Email: Rejiya16@gmail.com
- Insta : rejiya16