1001 Nights Ep-1-ஷாரியர் மற்றும் ஷாஜமான் –

1001 Arabian Nights Audio Books in Tamil

by Rejiya

1001 அரேபிய இரவுகள் episode – 1

முன்னொரு காலத்துல பேரரசர் ஒருவர் இந்தியா முதல் சீனம் வரை நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தார்  .. அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் மூத்தவர் ஷாரியர் ‘இளயவர் ஷாஜமான் , இந்த இருவரும்  அவங்களுடய சரியான வயதில் குதிரை சவாரி மற்றும் போர் பயிற்சியும் தன் தந்தையிடமிருந்து கற்று தேர்ந்தார்கள். காலப்போக்கில் பேரரசர் மாண்டார் . சகோதரர் இருவரும்  நாடாளத்  தொடங்கினார் . நாட்டின் வெகு தூரத்தில் உள்ள சாமார்க்கண்ட் நாட்டை இளையவன் ஷாஜமான் ஆண்டுவந்தார் .. சகோதரர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்புக் கொண்டு வாழ்ந்து வந்தனர் , இவர்களின் நள்ளாட்சியை கண்டு மக்கள் அனைவரும் உலகமே வியந்தனர் ,

இப்படியே இருபது வருடம் உருண்டோடியது சகோதரர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை ,ஒருநாள் மூத்தவர்  ஷாரியர்  தன் மந்திரியை அழைத்து நான் என் தம்பியை பல வருடங்களாக பார்க்காததை பற்றியும் ஆறு மாத காலமாவது தன் தம்பி தன்னுடன் தங்கி இருக்க வேண்டும் என்றும்  உடனே பார்க்க  வேண்டும் என்றும் சொல்லி ஷாஜமானை உடனே அழைத்து  வர செய்தார் கோலாகலமான விருந்தும் நடந்தது …

மந்திரியும் மூன்று இறவுகளும் பகளுமாக மிக பெரிய பரிசு பொருட்களுடன் பயணம் செய்தார் , மிக கொடிய பாலைவனங்கள் அணைத்தயும்  தாண்டி நான்காம் நாள் சாமார்க்கண்ட் நாட்டை அடைந்தார் …..

நான்காம்  நாள் காலையில் மன்னார்  ஷாஜமான்  தன்
அரசாட்சியை  தன் மந்திரிகளிடம்  ஒப்படைத்து விட்டு
அண்ணன் கொடுதனுப்பியது போலவே பன்மடங்கு அதிகமான ஓட்டகங்களுடன் பயணப்பட்டார் ஆனால் தன் அன்பு அண்ணனுக்கு வாங்கி வைத்த மிக விலையுயர்ந்த ரத்தினம் ஒன்றை மறந்துவிட்டோமே என்று நினைவு வரவே ,பயணமும் தடைபட கூடாது என்று தான் மட்டும் மீண்டும் குதிரையை வேகமாக செழுதிக்கொண்டு போனார் ,அங்கே அரண்மனை கதவு விரிய திறந்திருந்தது ..

மேலும் உள்ளே சென்று தன் அந்தபுரதிற்குள்  சென்ற மன்னருக்கு பேர் அதிர்ச்சி  காதிருந்தது அதை  கண்ட  மன்னரால் ஓர் அடிக்கூடா எடுத்து  வைக்க முடியவில்லை அப்படி அவர் கண்ட காட்சிதான் என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *