அனைவருக்கும் வணக்கம்,
இந்த தளத்தில் நான் பேசும் ஒலி நூல்கள் தங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகின்றேன். ஒருவேலை ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் தெரியப்படுத்தவும். நான் முடிந்தவரை திருத்திக்கொள்கிறேன்.
15 நிமிடம் உள்ள ஒரு அத்தியாயம் (episode) பேசுவதற்கு, திருத்துவது (Edit), இசை மற்றும் புகைப்படம் சேர்ப்பது, இணையத்தில் பதிவேற்றுவது ஆகிய பணிகளுக்கு ஒரு நாளில் கணிசமான நேரத்தை நான் செலவிடுகிறேன் (பயன்படுத்துகிறேன்). மேலும் இந்த Website / Android App ஆகியவற்றை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவை இதற்கு பின்னால் உள்ள எனது சவால்கள்.
எனவே நான் தொடர்ந்து பல நல்ல கதைகள் ஒலி வடிவில் பேச, தங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை நன்கொடையாக வழங்கினால், அது எனக்கு பெரிய உதவியையும் ஊக்கத்தையும் கொடுக்கும். மேலும் இதன்மூலம் என்னுடைய ஒலிநூல்கள் Website மற்றும் செயலிகளை (App) வாசகர்கள் வசதியாக கேட்கும்படி வடிவமைக்க (UI) உதவியாக இருக்கும்.
மேலும் நல்ல தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் ஒலி நூல்களின் தரத்தையும் உயர்த்த உதவியாக இருக்கும்.
பணமும் மனமும் படைத்த நல்ல உள்ளங்கள் நன்கொடை வழங்கலாம்.
இந்தியாவில் வசிப்பவர்கள்
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்
குறிப்பு: நன்கொடை வழங்கியவர்கள் மறவாமல் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தவும்
தங்களுடைய நன்கொடைகள், என்னை தொடர்ந்து பல நல்ல ஒலி நூல்கள் பேச உதவியையும் ஊக்கத்தை அளிக்கும்.
நன்றி
உங்கள் ரெஜியா…
Recent Comments