3. விண்ணகரக் கோயில் | புது வெள்ளம்

by | Jan 3, 2020 | PS-1 புது வெள்ளம்

அத்தியாயம் 3: விண்ணகரக் கோயில்

பொன்னியின் செல்வன் புது வெள்ளம்.

ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தியதேவனிடம் கேட்ட உதவி !

விண்ணகரக் கோயில்

சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் நிகழ்கின்றது. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அப்படி ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது.

—————————-
நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-

“பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொள்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக் கினியன கண்டோம்!
தொண்டீர் எல்லீரும் வாரீர்!
தொழுது தொழுது நின்றார்த்தும்!
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடி நின்றாடிப்
பரந்து திரிகின்றனவே!”


இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது….

Ponnniyin Selvan Part 1 (Puthu Vellam) Ep 3 – Vinnagarak Koil Audio Book Tamil.